தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன் இல்ல திருமணவிழாவில், அடுத்த மாதம் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என செயல்ற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன் இல்ல திருமணவிழா அடுத்த மாதம் டிசம்பர் 5–ஆம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 4–ஆம் தேதி மாலையில் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ள தடுப்புக்கான எந்தவித முன்னேற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. ஆகையால் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அதனை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும்.

இதனை செய்ய தவறும் பட்சத்தில் மாநகர தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், அவைத்தலைவர் சுசீ.ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருச்சிற்றம்பலம், ஜெயக்குமார்ரூபன், பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.