தேனி, ஆண்டிபட்டியருகே 10ம் வகுப்பு பள்ளிமாணவி காதலிக்க மறுத்ததால் அவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள இராஜகோபாலன்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் ,கூலிதொழிலாளி இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலகுறைவால் இறந்துவிட்டார். இவரது மனைவி அமுதா தனது மகன் பாலாஜி மகள் புவனேஸ்வரி ஆகியோருடன் இராஜ கோபாலன்பட்டியிலேயே தனியாக வசித்து வருகிறார்.
ஆண்டிபட்டி அரசுபெண்கள் மேல்நிலைபள்ளியில் 10ம் வகுப்புபடித்து வரும் மாணவி புவனேஸ்வரி தினமும் பள்ளிக்கு செல்லும்போது அதே ஊரை சேர்ந்த நவீன் பின் தொடர்ந்துள்ளார். நவீன் தேனியில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்.
தன்னை காதலிக்க வழியுறுத்தி பலநாட்களாக தொந்தரவு செய்துவந்துள்ளார். இந்நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி புவனேஸ்வரி இராஜகோபாலன் பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தன்னை காதலிக்க நவீன் வழியுறுத்தியுள்ளார். மாணவி புவனேஸ்வரி தான் படிக்கவேண்டும் என்றும் எனவே உன்னை காதலிக்கமுடியாது என்றுமறுத்துள்ளார்.
இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீன் மாணவி புவனேஸ்வரியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதையடுத்து மாணவி புவனேஸ்வரி ரத்தவெள்ளத்தில் விழுந்தார். கத்தியால் குத்திய நவீன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த புவனேஷ்வரியை அங்குள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. தனது மகள் கத்தியால் குத்தப்பட்டது பற்றி புவனேஸ்வரியின் தாயார் அமுதா ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் கொடுத்தபுகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர் நவீனை தேடி வருகின்றனர்.
காதலிக்க மறுத்த 15 வயது பள்ளி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்ப்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
