srilankan navy denies that they did not killed anybody

ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்ப்பட்ட விவகாரம் அனலாய் தகித்து வரும் நிலையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்று இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்சோ நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாக்குதலில் சீரோண் என்ற மீனவர் காயமடைந்தார்…

இதற்கிடையே பிரிட்சோவின் மரணத்திற்கு நீதி கேட்டு உடலை வாங்காமல் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச்சூழலில் மீனவர் பிரிட்சோவை நாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என்று இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள இலங்கை அரசு, இந்தியா மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளது.