srilanka prime minister will come to india and speech about fisherman problem
அரசு சுற்றுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏப்ரல் 25 ஆம் தேதி இந்தியா வருகிறார். அப்போது மீனவர் பிரச்சனை குறித்து பிரதமரிடம் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்கதையாகி வருகிறது. தமழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து படகுகளை பறிமுதல் செய்வது, பின்னர், தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது, பிறகு மீனவர்களை விடுவிப்பது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசு சுற்றுமுறை பயணமாக வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி இந்தியா வருகிறார்.
ஏப்ரல் 26 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது மீனவர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுற்றுபயணம் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோரையும் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேச உள்ளார்.
