இன்று இரவுக்குள் மும்பை வருகிறது ஸ்ரீ தேவியின் உடல்..!

ஸ்ரீ தேவியின் உடல் இன்னும் இரண்டு மணி நேரத்தில்,எம்பால்மிங் முடிந்து குடும்பத்தினருடன் ஒப்படைக்கப் படும் என  தகவல் வெளியாகி உள்ளது

ஆரம்பத்தில்,ஸ்ரீ தேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் உடற் கூறு ஆராய்வு பின்,குடி போதையில் குளியலறை தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு  இருந்தது.

பின்னர் இறப்பு சான்றிதழை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது.பின்னர் எழுந்த பல  சந்தேகங்களுக்கு,ஸ்ரீ தேவியின் கணவருடன் விசாரணை செய்யப் பட்டு வந்தது.

ஸ்ரீ தேவியின் உடல், இன்று வருமா நாளை வருமா..? அல்லது மேலும் இரண்டு  நாட்கள் ஆகலாமா என்ற சந்தேகம்  இருந்து வந்தது.

இந்நிலையில், கிளியரன்ஸ் லெட்டர்  கொடுக்கப்பட்டு, எம்பால்மிங் செய்து  இன்று இரவுக்குள்  இந்தியா கொண்டுவரப் படுகிறது.

இதன் காரணமாக திரை துறையினர் மற்றும் பொதுமக்கள் துபாய் விரைய தொடங்கி உள்ளனர்.

பொதுமக்களும் ஆவலுடன் ஸ்ரீ தேவி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த  மும்பையில் அவரது இல்லத்தின் முன் கூடி இருக்கிறார்கள்

கடந்த  மூன்று நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஸ்ரீதேவி மரணம்,  தற்போது முதல்கட்டமாக உடலை இந்தியா கொண்டுவருவதில் இருந்த சிக்கல்  முடிந்துள்ளது  என  கூறப்படுகிறது