நீலகிரி

நீலகிரியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கெட்டுப்போன கோழிக்கறி, காலவதியான ரெடிமேட் பரோட்டா, பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி சமைப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் சாலையோரங்களில் விற்கப்படும் தரமற்ற உணவுகளை கண்டறிந்து அதனை விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.