வரும் 27 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு 16 பெட்டிகளுடன் முன்பதிவில்லா அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் விழாக்காலங்கள் மட்டுமல்லாமல் கோடை விடுமுறையின் போதும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் பெரும்பாலும் முன்பதிவில்லா பெட்டிகளிலேயே இவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும்.

இந்த கூட்ட நெரிசலைத் தவிர்க்க நாள்தோறும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு 16 பெட்டிகளுடன் முன்பதிவில்லா அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிதுள்ளது.

இந்த அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16191), பிற்பகல் 3.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (16192), காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயில், 16 முன்பதிவில்லா பெட்டிகளை உள்ளடக்கியது ஆகும்.

இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.என  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.