ஹாப்பி நியூஸ்.. மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்.. என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் ..?
தீபாவளி பண்டிகையையொட்டி, போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் ராமேஸ்வரம்- மதுரை இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு சிறப்பு கட்டணத்தில் ரயில் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் ராமேஸ்வரம்- மதுரை இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு சிறப்பு கட்டணத்தில் ரயில் இயக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க:தலையை வெட்டி தோரணம் தொங்கவிடுவோம்... சிவி சண்முகத்திற்கு நேருக்கு நேர் கொலை மிரட்டல்.. கதறும் வழக்கறிஞர்.
அதன்படி வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இந்த சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 6.20 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து இருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதில் 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் உள்ளன.
மேலும் படிக்க:திறமையற்ற முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின்..! அமைச்சர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை - இபிஎஸ்
வழக்கமான ரயிலை விட இதில் 1.3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.