special medical camp for autisam children in chennai by health secretary rathakirushnan inform

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ வசதிகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ வசதிகளுக்கான திட்டத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ வசதிகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 30 லட்சம் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

58 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தெரப்பிகள் கொடுக்கப்படும்.

மொழிப்பயிற்சி, செயல்பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.