Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் சான்றிதழ்கள் எரிப்பு… தீவைத்தவரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தின் போது மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து கொளுத்தியவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. 

Special Investigation Team Arrests Person Who Burned Certificates In Kallakurichi School Riot
Author
Kallakurichi, First Published Aug 11, 2022, 8:29 PM IST

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தின் போது மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து கொளுத்தியவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: ஆவினில் அருமையான வேலை.. ரூ.43,000 வரை சம்பளம்.. நாளை தான் கடைசி.. முழு விவரம்..

Special Investigation Team Arrests Person Who Burned Certificates In Kallakurichi School Riot

ஆனால் மாணவியின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இது பெரும் போராட்டமாக மாறியதை அடுத்து பள்ளி வாகனம் எரிக்கப்பட்டதுடன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களின் சான்றிதழ்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தியதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: மக்களின் ஆசையே ஏமாற்றத்திற்கு காரணம்.. இந்த விஷயத்துல காவல்துறை தோற்றுவிட்டது.. சீறும் ராமதாஸ்..! 

போராட்டம் நடத்தி பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட தொடர்பாக வழக்கில் இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்  அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் போது சக்தி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்றுகளை தீ வைத்து கொளுத்திய வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios