திமுக நிர்வாகியாச்சே பாசம் இருக்கத் தானே செய்யும்! வீடியோவுடன் அண்ணாமலையிடம் வசமாக சிக்கிய அப்பாவு!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரனை, சபாநாயகர் அப்பாவு 'என் தம்பி' எனக் குறிப்பிட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Speaker Appavu my brother Gnanasekaran video viral! annamalai question tvk

கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக  ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகி என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், இதனை திமுக திட்டவட்டமாக மறுத்து வந்தது. 

Speaker Appavu my brother Gnanasekaran video viral! annamalai question tvk

அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய  முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞானசேகரன் திமுக அனுதாபிதானே தவிர, திமுக உறுப்பினர் கிடையாது என விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் பத்திரிக்கையாளர் நிரஞ்சன் எழுதிய இந்தியா வென்றது என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு என் தம்பி ஞானசேகரன் என்று பேசிய வீடியோவை  வெளியிட்டு  அண்ணாமலை விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர்  அப்பாவு அவர்கள், அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுத தைரியல! சந்தி சிரிக்கிறது! இபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்தது யார் தெரியுமா?

Speaker Appavu my brother Gnanasekaran video viral! annamalai question tvk

திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.  பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. 

 

தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே? என அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios