Asianet News TamilAsianet News Tamil

கரும்பு விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்க தொகை... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!!

கரும்பு விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்க தொகை வழங்கப்படும் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

soon special incentive for sugarcane farmers says minister mrk panneerselvam
Author
First Published Dec 11, 2022, 4:52 PM IST

கரும்பு விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்க தொகை வழங்கப்படும் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், முதல்வரின் அறிவுரைக்கிணங்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரை கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  கடந்த 2015-16 முதல் 2019-20 அரவைப்பருவம் வரை கரும்பு விலை உயர்த்தப்படாமல், டன்னுக்கு ரூ.2750 மட்டுமே வழங்கப்பட்டது. 2020-21 அரவைப்பருவத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price ரூ.2707.50-ஐ விட கூடுதலாக உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.192.50 முதல்வரின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது.!நான் சாதாரண ஸ்டாலின் இல்லை.! முதலமைச்சர் அதிரடி

இதனால், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 2900 கிடைத்தது. கரும்பு 2020-21 விவசாயிகளின் அரவைப்பருவத்தில் நலனுக்காக 95,000 அரசு எக்டராக எடுத்த இருந்த நடவடிக்கைகளினால், கரும்புப் பதிவு 2022-23 அரவைப்பருவத்தில் 1,40,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 இலட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 139.15 இலட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது. வேளாண்மை-உழவர் நலத்துறை 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு, ஒன்றிய அரசு 2021-22 ஆம் அரவைப்பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ.2755-ஐ காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கிடும் வகையில், மாநில அரசு ரூ.199 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கி வேளாண்மை-உழவர் நலத்துறை ஆணையிட்டது.

இதையும் படிங்க: லஞ்சம் கொடுத்து தான் துணை வேந்தரானீர்களா.? பதவி விரும்பி பாலகுருசாமிக்கு நாவடக்கம் தேவை!கடுமையாக விளாசிய திமுக

\2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் 07.12.2022 அன்று துவக்கி வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விபரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத்தொகையினை விரைவில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.199 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால், பொது, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் 2021-22 அரவைப்பருவத்தில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 1.21 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios