சிவகங்கை

பி.எஸ்.என்.எல் 4-ஜி அலைக்கற்றை சேவையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் அதன் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்த்த் தொழிற்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் மோகன்தாஸ், காரைக்குடி கோட்டச் செயலாளர் பூமிநாதன், என்.எஃப்.டி.ஆர் சங்க மாவட்டச் செயலாளர் மாரி, ஓய்வூதிய சங்க மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர். 

இவர்களோடு சிவங்ககை, காரைக்குடி, பரமக்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து  ஏராளமான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.