வேலூர்

பணம் கேட்டு தராததால் தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த மகனை  காவலாளர்கள் கைது செய்தனர். 

இந்த நிலையில் காவலாளர்கள் தன்னை தேடி வருவதால் நேற்று காலை காட்டுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் சரணடைந்தார் சாந்தசீலன். அப்போது அவர்  கொடுத்த வாக்குமூலத்தில், "தந்தையிடம் பணம் கேட்டபோது அவர் தர மறுத்ததோடு வீட்டை விட்டு வெளியே போ என்று திட்டியதால் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து சாந்தசீலனை பாணாவரம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஒப்படைத்தார். சாந்தசீலனை கைது செய்த காவலாளர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.