தமிழகத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியால் பரபரப்பு நிலவுகிறது. இரு தரப்பினரும் தங்களை ஆட்சி அமைக்க கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
ஆனால் ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக சசிகலா உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, வரும் வரை ஆளுநர் காத்திருக்கிறார் எனவேதான் அவர் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி, செய்தியாளர்களிடம் பேசும்போது, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்புவெளியாகாத பட்சத்தில், சசிகலாவை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம் என தெரிவித்தார்.
அதே நேரத்தில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல், கவர்னர் காலந்தாழ்த்துவது சரியே என்று தெரிவித்த சோலி சொரப்ஜி, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து முடிவு எடுக்க, அவருக்கு நேரம் தேவைப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.
சசிகலாவின் கோரிக்கையை வித்யா சாகர் ராவ் நிராகரிக்கவிலை என தெரிவித்த சொரப்ஜி, அதனால் காலம் தாழ்த்துவது என்பது சட்ட விரோதமல்ல. என்றும் தெரிவித்தார்.
