தனது அறுந்து போன செருப்பை மாற்றாமல் டிவிக்காரர்கள் முன்னிலையில் சாதாரண செருப்புக்கடைக்கு சென்று தைத்துவிட்டு நூறு ரூபாய் கொடுத்து சில்லரையை நீயே வைத்துகொள் என்று ஸ்டாண்ட் அடித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மோடியின் 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னால் பொதுமக்கள் படும் துன்பத்தை விவரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வித்யாசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் தங்களது தினசரி வருமானத்தை இழந்துவிட்டனர். 

தினசரி சில்லறை வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பல்வேறு ஸ்டண்டுகளையும் பொய் பிரச்சாரங்களையும் சமூக வலைதளங்களிலும் , வாட்ஸ் அப்புகளிலும் பரப்பி வருகின்றனர். 

அதன் ஒரு கட்டமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்மிருதி இரானி கால் செருப்பு அறுந்து போனது. இதனால் ஒற்றை செருப்புடன் வந்தவர் டிவி சானல்கள் சுற்றிலும் இருப்பதை பார்த்தவுடன் என்ன நினைத்தாரோ அனைவரையும் திரட்டி கொண்டு செருப்பு தைக்கும் கடைக்கு சென்றார். 

அங்குள்ள செருப்பு தைப்பவரிடம் செருப்பை கொடுத்து தைக்க சொன்னார். துப்பாக்கி காவலர்கள் புடை சூழ நான்கைந்து பெண்மணிகள் செருப்பை தைக்க வந்து கொடுத்தவுடன் செருப்பு தைப்பவருக்கு தன்னிடம் செருப்பு தைக்க வந்துள்ளவர் மத்திய அமைச்சர் எனபது தெரியாதததால் என்னடா இது நாம் என்ன தப்பு செய்தோம் ஓரமா கடை போட்டு செருப்புத்தானே தைக்கிறோம் இதுக்கு போய் துப்பாக்கி போலீசா என்று மிரட்சியுடன் பார்த்துள்ளார். 

செருப்பு தைக்க வந்துள்ளதாக ஸ்மிருதி இரானியுடன் வந்த வானதி சீனிவாசன் கூறியவுடன், பயந்த படியே செருப்பை வாங்கி தைக்க ஆரம்பித்துள்ளார். பணம் கொடுக்காமல் இருக்கத்தான் துப்பாக்கியுடன் ஆட்களை அழைத்து வந்திருக்கிறார்களோ என்று பயந்த படியே தைக்க ஆரம்பித்தவர் பக்கத்தில் அமர்ந்த ஸ்மிருதி ராணி எவ்வளவு என்று கேட்க பத்து ரூவா என்று செருப்பு தைப்பபவர் சொல்ல என்கிட்ட சேஞ் இல்லை என்றவுடன் யாரோ ரூ.100 கொடுக்க அதை அருகில் இருந்த கல்லா பெட்டியில் ஸ்மிருதி இரானி வைத்தார். 

உடன் இருந்த வானதி சில்லரை வேண்டாம் என்று சொல்ல , ஸ்மிருதியும் தமிழில் சில்லரை வேண்டாம் என்று சொன்னார். ஆனால் செருப்பு தைப்பபவர் இவர்களை மாதிரி அரசியவாதி இல்லை , அவர் ஏழை தொழிலாளி எனபதால் மீதிக்காசுக்கு செருப்பு முழுதும் இனியே அறுத்து போகாத அளவுக்கு தைத்து கொடுத்து அனுப்பி வைத்தார்.

செருப்பு அறுந்து போனால் உதவியாளரிடம் சொன்னால் சைஸ் படி வாங்கி தரப்போகிறார். அதை விட்டு விட்டு சாலையோரம் அமர்ந்து எல்லோர் நேரத்தையும் வீணடித்து இவர்கள் ஸ்டண்டுக்கு அளவே இல்லையா என பாதுகாப்பு போலீசார் தலையில் அடித்து கொண்டு சென்றுள்ளனர்.