ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் மீது சுற்றுலா பேருந்து மோதி நொருங்கியது. இதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, வேன் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக நெடுஞ்சாலையில் வந்தது.

அப்போது, நிலை தடுமாறிய சுற்றுலா வேன் நின்றுக் கொண்டிருந்த கண்டெய்னரின் பின்பக்கம் மீது பலமாக மோதியது. இதில், சுற்றுலா வேனின் முன்பக்கம் தட்டையாக நொருங்கியது.

இந்த விபத்தில், வேனில் இருந்த பயணிகள் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆம்பூர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.