Asianet News TamilAsianet News Tamil

விரட்டியடிப்போம் விஷால் ரெட்டியை! பச்சை தமிழரை பதவியில் வைப்போம்: சினிமா சங்கத்தில் சர்ச்சை போர்...

அந்தப் பதவியில் அவர் பெரிய மேஜிக்குகளை செய்திருந்தார் என்றால் அதை ரசித்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை, அவர் சொதப்புகிறார், தப்பு பண்ணுகிறார், தர்மம் இல்லாமல் நடக்கிறார்! என்று தேர்தலின் போது அவரை தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களே போட்டுப் பொளக்கின்றனர். 

slogans against vishal reddy
Author
Chennai, First Published Dec 15, 2018, 12:07 PM IST

விஷால், தமிழ் சினிமாவில் ஹீரோவாக சாதித்ததை விட, தென்னிந்திய நடிகர்கள் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர்! என்றுதான் பெரிதாய் சாதித்தார். கோலிவுட்டில் காலங்காலமாய் கோலோச்சிக் கொண்டிருந்த பெரும் முதலைகளை, ஒரு இளைஞரான அவர் குறுகிய காலத்தில் காலி செய்து பெரும் பொறுப்புக்கு வந்தது ஆச்சரியப்படுத்தியது. slogans against vishal reddy

ஆனால் அந்தப் பதவியில் அவர் பெரிய மேஜிக்குகளை செய்திருந்தார் என்றால் அதை ரசித்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை, அவர் சொதப்புகிறார், தப்பு பண்ணுகிறார், தர்மம் இல்லாமல் நடக்கிறார்! என்று தேர்தலின் போது அவரை தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களே போட்டுப் பொளக்கின்றனர். 

புதிய படங்களுக்கு ரிலீஸ் தேதியை நிர்ணயிக்கும் விஷயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று பெரும் பஞ்சாயத்துகள் தொடர்ந்து வெடிக்கின்றன. சமீபத்தில் தனுஷின் ‘மாரி 2’ பட டீம், விஷாலுக்கு எதிராக வைரலாக்கிய ‘திரைக்கு வர்றோம், முடிஞ்சா தடுத்து பாரு’ என்கிற வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜே இந்த பஞ்சாயத்தின் உச்சத்தை விளக்குகிறது. இது போக, விஷாலுக்கு உறுதுணையாக செயற்குழு உறுப்பினர்களாக இருந்த உதயா, சுரேஷ் போன்றவர்களே விஷாலை எதிர்த்து ராஜினாமா செய்தது அவருக்கு எதிரான போரின் உச்சம் சொல்லியது. slogans against vishal reddy

தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷாலுக்கு எதிராக தொடர்ந்து சிக்கல்கள், சர்ச்சைகள். தமிழ்ராக்கர்ஸின் ஆட்டம் விஷால் பதவிக்கு வந்த பிறகு அதிகரித்துவிட்டது! என்று பெரும் குற்றச்சாட்டை சொல்லி அவரை கடித்துக் குதறுகிறது பெரும் சினிமா கூட்டம். 

இப்படி ஆளாளுக்கு விஷாலை கார்னர் செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக புதிய கோஷம் ஒன்று கிளம்பியுள்ளது கோடம்பாக்கத்தில். அதாவது விஷாலை ‘பிழைக்க இங்கே வந்தவர்’ என்று மொழி ரீதியில் திட்ட துவங்கியுள்ளனர். அதன் உச்சமாக, “விஷால் ரெட்டியை விரட்டி அடித்துவிட்டு, தலைவர்  இடத்தில் பச்சை தமிழரான பாரதிராஜாவை அமர வைப்போம்.” என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பெரும் குரல் கேட்க துவங்கியிருக்கிறது. 

மன ரீதியாக இதில் பெரிதும் நொந்துவிட்டாராம் விஷால். தன்னை இந்த கோணத்தில் ஒதுக்க துவங்கினால் அடுத்து நடிகர் சங்கம், அதன் பின் தனது படங்கள் என்று எல்லா தளங்களிலுமே கை வைப்பார்களே! என்று கவலையில் ஆழ்ந்துவிட்டாராம். விஷாலின் இந்த பதற்றத்தைப் பார்த்து அவரது மாஜி நண்பர்கள் புது உற்சாகத்துடன் அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். தங்களை காலை வாரியதற்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என்று சவால் விட்டபடி சதிராட துவங்கிவிட்டனர். 

சண்டக்கோழியை சூப் வைக்காம விடமாட்டாய்ங்க போல!

Follow Us:
Download App:
  • android
  • ios