Asianet News TamilAsianet News Tamil

சிவன்மலை ஆண்டவர் கோவிலில் உத்தரவு பொருளாக கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை ….விவசாயம் செழிக்கும் என எதிர்பார்ப்பு

காங்கயம், சிவன்மலை கோவிலில் ஆண்டவர் உத்தரவு பொருளாக கதிர் அறுக்கும் மூன்று அரிவாள் வைக்கப்பட்டன. இதனால், விவசாயம் செழிக்கும்; உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்கும் என பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வழிபாடு செய்தனர்.

 

sivanmalai andavar koil Pooja
Author
Sivanmalai, First Published Oct 27, 2018, 7:34 PM IST

திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நாட்டில், ஏற்படும் மகிழ்ச்சி அல்லது இன்னல் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு குறித்து உணர்த்தும் வகையில், ஏதேனும் ஒரு பொருள் வைத்து வழிபாடு நடக்கும்.

sivanmalai andavar koil Pooja
சிவன்மலை ஆண்டவர், யாராவது ஒரு பக்தரின் கனவில் தோன்றி, குறிப்பால் உணர்த்தும் பொருள் இந்த பெட்டியில் வைக்கப்படும். அவ்வகையில், இந்த உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் மூன்று அரிவாள் வைத்து பூஜை நடந்தது.

குண்டடம், விசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த வேலுசாமி, என்ற பக்தரின் கனவில் இது உத்தரவானது.இது தொடர்பாக சிவன்மலை கோவில் சிவாச்சார்யார் கூறும்போது, 'ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருள் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்

தற்போது, மூன்று கதிர் அறுக்கும் அரிவாள் வைக்கப்பட்டுள்ளது.மூன்றாண்டுகளுக்கு பின் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால், விவசாயம் செழிக்கும். உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios