Sivagangai district will get top in Plus 2 election

சிவகங்கை

பிளஸ் 2 பொதுத் தேர்விலும் மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெறும் என்று அவர் மாவட்ட ஆட்சியர் க.லதா புதன்கிழமை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அவர், "பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 98.50 சதவீதம் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 

கடந்த ஆண்டு (2016 - 2017) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.02 சதவீதம் பெற்று மாநில அளவில் 8-வது இடத்தில் இருந்தது. 

நடப்பாண்டில் (2017 - 2018) மாணவ, மாணவிகளின் கடின உழைப்பாலும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முயற்சியாலும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த வெற்றியை ஆண்டுதோறும் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 

இனிவரும் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சகிதா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பரம தயாளன் ஆகியோரை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் க.லதா நினைவு பரிசு வழங்கினார்.