மதுரை கிராணைட் முறைகேடு வழக்கில் சிந்து கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 106 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளனர்.

மதுரை சிந்து  கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ். இவர் கிரானைட் வெட்டி எடுப்பதில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது.

மேலும், சிந்து கிரானைட் நிறுவனம் உரிய அனுமதியின்றியும், அரசின் விதிமுறைகளை மீறியும் மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

விசாரணையில் செல்வராஜ் கிராணைட் வெட்டி எடுப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும்முறைகேடான வழியில் பணம் ஈட்டியிருப்பதும், அந்த பணத்தை பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சிந்து கிராணைட் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த உரிய விளக்கம் அமலாக்கத்துறையிடம் சமர்பிக்கப்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து சிந்து கிரணைட் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 106 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இன்று அமலக்கத்துறையினர் முடக்கினர்.