Asianet News TamilAsianet News Tamil

முதல்வரை வேந்தராக கொண்டு சித்தா பல்கலைக்கழகம்... சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!!

முதல்வரை வேந்தராகக் கொண்டு புதிய சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

Siddha University Bill passed in the Legislative Assembly
Author
Chennai, First Published Apr 28, 2022, 5:05 PM IST | Last Updated Apr 28, 2022, 5:05 PM IST

முதல்வரை வேந்தராகக் கொண்டு புதிய சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ் முனிவா்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முனிவா்கள் மனித உடலின் செயல்பாடு மற்றும் நோய்களைக் குண்படுத்துவதற்கான வழிமுறைகளில் பாரம்பரிய அறிவைக் கொண்டிருந்தனா். அதன் வகையில் தமிழகத்தில் உள்ள சித்தா்களால் சித்த மருத்துவ பாரம்பரியம் உருவாக்கப்பட்டது. இதேபோல ஆயுா்வேதா மற்றும் யோகா ஆகியவை இந்தியா முழுவதும் வளா்ச்சியடைந்தன. ஹோமியோபதி மற்றும் யுனானி ஆகிய பாரம்பரிய சிகிச்சையானது ஆரம்பக் காலத்தில் இந்தியாவுக்கு வெளியே உருவாகியிருந்தாலும், இந்திய கலாசாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் (ஆயுா்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) மருத்துவ முறைகள் வளமான பாரம்பரிய மற்றும் இலக்கியங்களைக் கொண்டுள்ளன.

Siddha University Bill passed in the Legislative Assembly

சித்த மருத்துவம் மற்றும் பிற பாரம்பரிய முறை மருந்துகளின் அறிவியல் முறை மதிப்பீடானது, அதன் நன்மைகள், மனித இனம் முழுவதற்கும் சென்றடையும் வகையில் பரவிட மேலும் ஆராய்ச்சி செய்வது தேவையாகிறது. சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் முறைகள் பிறவற்றிற்கு, ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் அளித்து மேம்படுத்துவதற்காக, அதன் நோக்கங்களுக்காக தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அரசு கருதியது. அதன்படி இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்குவதற்கான சட்டமசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியின் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

Siddha University Bill passed in the Legislative Assembly

இந்த சட்ட மசோதா பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை உரையின்போது நிதியமைச்சா் மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை தனியாக அமைப்பதற்கு ரூ.2 கோடி முதலில் ஒதுக்கப்படும் என்று அறிவித்தாா். அதைத் தொடா்ந்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது சென்னைக்கு அருகில் இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவ பல்ககலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் பேரவையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios