இரண்டு கால்கள் துண்டான தந்தை.. உடல் நசுங்கி உயிரிழந்த பள்ளி மாணவி.. நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40). டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரியா(15). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 10ம் வகுப்பு பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40). டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரியா(15). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், மகள் பிரியா உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க;- தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 நிறுத்துவது நியாயமா? ராமதாஸ்.!
அப்போது, திருவள்ளுவர் மாவட்டம் ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னார் அமர்ந்திருந்த மகள் பிரியா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், அவரது தந்தையின் இரண்டு கால்களும் துண்டானது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
இந்த விபத்து தொடர்பாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு கால்களை இழந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த சங்கரை மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் விபத்தில் பலியான மாணவி பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்த மாணவி பிரியாவின் உறவினர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.