அதிர்ச்சி!! மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. இரண்டு உயிர்களை காவு வாங்கிய பின்பும் தொடரும் அவலம்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அசைவ ஓட்டலில் மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இதுதொடர்பாக வாடிக்கையாளர், கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலை தளங்களில் வைராலாகி பரவி வருகிறது.
 

Shocked as cockroach was found in mutton biryani at Arani

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அசைவ ஓட்டலில் மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வாடிக்கையாளர், கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலை தளங்களில் வைராலாகி பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் மணிகூண்டு அருகில் 5 ஸ்டார் என்ற அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரும் அவரது மனைவியும் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இருவர் மட்டன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அதில் கரப்பான்பூச்சி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க:ஷாக்கிங் நியூஸ்.. ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி.. தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி..!

பின்னர் ஓட்டல் ஊழியரிடம் அந்த தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்த வீடியோ தற்போது சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவரும், சிறுமி  ஒருவரும் என 2 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தேறியுள்ளன. இந்நிலையில், பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:பரபரப்பு!! சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்.. மயங்கி விழுந்த மருத்துவர்கள்.. அவசர சிகிச்சையில் அனுமதி..

முன்னதாக கடந்த மாதம், இதே ஓட்டலில் சிக்கன் பிரியாணி மற்றும் தந்தூரி சாப்பிட்டு சிறுவனுக்கு திடீரென்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போன்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள 7 ஸ்டார் பெயரிலான அசைவ ஹோட்டலில் ‘தந்தூரி சிக்கன்’ சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க:தற்காலிக ஆசிரியர் நியமனம்.. நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்.. திருந்திய வழிக்காட்டுதல் வெளியீடு..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios