ஷாக்கிங் நியூஸ்.. ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி.. தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி..!
சமீபகாலமாக கெட்டுப்போன கூல்ட் ரிங்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. சவர்மா, பிரியாணி போன்ற உணவுகளாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சுரண்டையில் உள்ள ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக கெட்டுப்போன கூல்ட் ரிங்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. சவர்மா, பிரியாணி போன்ற உணவுகளாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது அதிகாரிகள் சோதனை செய்தாலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிக்க;- முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..!
துரித உணவகம், ஒரே எண்ணெயில் பொறிக்கப்படும் உணவுகளால் கேன்சர் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் அதிகமாக இளைஞர்களை தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கல்லில் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்கள், ரசாயனம் கலந்த பழங்கள் இவற்றை சாப்பிடும் குழந்தைகள் வயிற்று வலி மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிக்க;- பல் துலக்காமல் முத்தம் கொடுக்காதீங்க.. கண்டித்த மனைவியால் காண்டான கணவர்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களும் முன்பு தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள ஒரு ஓட்டலில் கட்டிட தொழிலாளர்களுக்கு கான்ட்ராக்டர் ஒருவர் சிக்கன் குழம்புடன் சாப்பாட்டு வாங்கி சென்றுள்ளார். தொழிலாளர்கள் மதியம் சாப்பிடுவதற்காக சிக்கன் குழம்பை சாதத்தில் ஊற்றிய போது ஒருவரது சாப்பாட்டில் இறந்து கிடந்த பல்லி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த தொழிலாளிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோன்று அந்த ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டர்களா என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.