நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் இயக்கம்.!! எப்போது தெரியுமா.?... டிக்கெட் கட்டணம் எவ்வளவு.?

கப்பல் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் பயணம் மீண்டும் இயக்கப்படவுள்ளது. வருகிற மே 13 ஆம் தேதி முதல் கப்பல் பயணம் தொடங்கபட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 

Shipping from Nagapattinam to Sri Lanka will commence from 13th May KAK

நாகை டூ இலங்கை கப்பல் பயணம்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து  கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட்டது. நாகையில் இருந்து இலங்கைக்கு கட்டணமும் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து சேவையை சரியாக இயக்கமுடியாத நிலை உருவானது. குறைவான பயணிகளை மட்டுமே கொண்டு இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழை காரணமாக போக்குரவத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 6 மாத காலம் போக்குவரத்து செயல்படவில்லை.  மழையை காரணம் காட்டி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பக்தர்களின் கவனத்திற்கு! பழனி முருகன் கோயிலுக்கு போறீங்களா? அப்படினா கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

மீண்டும் கப்பல் இயக்கம்

இந்தநிலையில் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.  வருகின்ற மே மாதம் 13 ஆம் சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளது. ஏற்கனவே செரியாபாணி என்ற கப்பல் இயங்கிய நிலையில் வேறொரு கப்பல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

கப்பல் டிக்கெட் எவ்வளவு.?

கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் வசூல் செய்யப்பட உள்ளது. அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது.  இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும். கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் ஆதரவை பொறுத்து கூடுதல் கப்பல் இயக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள்..தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி-அண்ணாமலையை விளாசும் S.V.சேகர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios