Asianet News TamilAsianet News Tamil

ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள்..தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி-அண்ணாமலையை விளாசும் S.V.சேகர்

ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா.? என எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். 

SV Shekhar has criticized that he is a fool who does not even know that each person has one vote KAK
Author
First Published Apr 28, 2024, 8:25 AM IST

வாக்காளர்கள் பெயர் நீக்கம்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர்கள் புகார்களை தெரிவித்தனர். குறிப்பாக தங்கள் தொகுதியில் பாஜகவிற்கு ஆதரவான வாக்குகள் நீக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து தேர்தல் ஆணையம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

SV Shekhar has criticized that he is a fool who does not even know that each person has one vote KAK

கை விரல் மையோடு போராட்டம்

வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகள் முன்னிலையிலேயே வெளியிடப்படுவதாகும், இதில் எந்த வித ஒளிவும் மறைவும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் திடீரென பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்பொழுது என் வாக்கு என் உரிமை, நான் உயிரோடு இருக்கிறேன் என் வாக்கு இல்லை. தேர்தலில் வாக்கு மட்டும் நீக்கப்படவில்லை ஜனநாயகமும் நீக்கிவிட்டார்கள் என புகார் தெரிவித்து, பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலானவர்கள் வாக்கு செலுத்தியதற்கான மை கை விரலில் இருந்தது.  விரல்களில் பூசப்பட்ட நீல நிற மை அழியாமலே இருந்தன. அப்படி இருக்கையில் இந்த போராட்டம் ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. 

 

ஒருத்தருக்கு ஒரு ஓட்டு

மேலும் வடிவேலு பட காமெடி போல் கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே என மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து  நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவில், ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா.? தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம் என விமர்சனம் செய்துள்ளார். 

கையில வச்ச மையே அழியல; அதுக்குள்ள ஓட்ட காணும்னு போராட்டமா? கோவையில் வசமாக சிக்கிய பாஜகவினர்

Follow Us:
Download App:
  • android
  • ios