முகநூல் மூலம் பழகி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் பாப்பன்நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  தனியார் பள்ளி படித்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் சிவா என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

 நீண்ட நாள் நடைபெற்ற உரையாடல்களுக்குப் பின்னர்  இருவரும் பரஸ்பரம் தொலைபேசி எண்களை மாற்றிக் கொண்டனர். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய சிவா, அவரை புதுச்சேரி அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியுள்ளார். 

சென்ற இடத்தில் சிவாவின் உண்மையான பெயர் இப்ராஹிம் என்பதும், அவர் பல மோசடியில் ஈடுபட்டதும் சிறுமிக்குத் தெரியவர  சண்டையிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இப்ராஹிம் அவரை அறையிலேயே விட்டு விட்டு திருப்பூர் சென்றுள்ளார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட விடுதி உரிமையாளரும் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். 

இதற்கிடையே மகளைக் காணாததால் அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சுமித்ராவின் கைப்பேசியை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில்  இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி சென்ற திருப்பூர் போலீசார் விடுதியில் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். புகாரின் பேரில் இப்ராஹிம் மற்றும் விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.