Seventy-day work of government doctors to continue to boycott It is also not affected by patients

நாமக்கல்

மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீகித இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தை ஏழாவது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போராட்டம் ஒருபக்கம் இருந்தாலும், அறுவை சிகிச்சை, அவசர பிரிவு போன்றவற்றிற்கு மருத்துவர்கள் செல்வதால் நோயாளிகள் பாதிக்கப்படவில்லை.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இதனால், அரசு மருத்துவர்கள் மேற்படிப்பு படிப்பது என்பது குதிரைக் கொம்பாகிவிடும். எனவே, ரத்து செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வேலையை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கு அரசியல் கட்சியினர் மருத்துவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் வேலைப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 7–வது நாளைத் தொட்டது.

இதனையொட்டி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்குச் சங்கத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியது:

“நாமக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 மருத்துவர்கள் வேலை செய்து வருவதாகவும், இவர்களில் 250 பேர் விடுமுறை எடுத்துப் போராட்டத்தில் பங்கேற்று இருப்பதாகவும், மீதமுள்ள 50 பேர் அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இதில் சங்கத்தின் செயலாளர் அருள், பொருளாளர் அமுதா மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.