ஐஜியாக பதவி உயர்வு பெரும் 7 டிஐஜிகள்.. 10 IPS அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு - தமிழ் அரசு வெளியிட்ட உத்தரவு!
Tamil Nadu Government : வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உட்பட ஏழு டிஐஜிகள், ஐஜியாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசுத்துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவதும், பதவி உயர்வு வழங்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது, 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை டி.ஜ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பி.ஆர். வெண்மதி, பி.அரவிந்தன், வி. விக்ரமன், சரோஜ் குமார் தாகூர், டி. மகேஷ் குமார், என். தேவராணி, இ.எஸ். உமா, ஆர். திருநாவுக்கரசு, ஆர். ஜெயந்தி, ஜி. ராமர் ஆகியோர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசனையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!
அதைத் தொடர்ந்து, 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முறையே ஆனந்த்குமார் சோமானி, ஆர். தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு.