நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதிகள் கிராமியப் பாடல்கள் பாடுவதில் மட்டுமல்ல சமூக அவலங்களையும் எதிர்த்து குரல் கொடுப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளனர். நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் ராஜலட்சுமி கருவுற்ற நிலையில் தனது கணவருடன் போராட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டுப்புற பாடல்களைப் பாடி பிரபலமான செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி  தம்பதிகள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து கிராமிய பாடல்கள் அனைவரையும் மயக்கி வருகிறது.

எம்.ஏ பட்டதாரியான செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் பல நிகழ்ச்சி மேடைகளில் ஒன்றாக இணைந்து பாடல்கள் பாடி பிரபலமானார்கள். பின் இவர்களுக்குள் காதல் ஏற்பட 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிராமிய பாடல்களால் பிரபலமான இவர்கள் நிறைய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் சென்றனர்.

செந்தில் கணேஷ் திருடு போகாத மனசு என்ற படத்தில் நாயகனாகவும்  நடித்துள்ளார். அதில் ராஜலட்சுமியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேடை நிகழ்ச்சியில் சந்தித்த பிரபலங்கள் மூலம் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர்.

நாட்டுப்புற பாடல்களை பாடி இவ்ர்கள் இருவரும் சமூக சேவை செய்வதோடு மட்டும்ல்லாமல், சமூக பிரச்சனைக்காகவும் இவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், கடந்த ஆண்டு . ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் நடைபெற்ற போராட்டங்களில் பாடகி ராஜலட்சுமி கருவுற்ற நிலையில் தனது கணவருடன் கலந்து கொண்டிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் சாதாரணமாக இருக்கும் இவர்கள் இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.