ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்த நிலையில், ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீது இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிப்பு: இந்தியாவுக்கான கூகுளின் 5 திட்டங்கள்!

அதன் தொடர்ச்சியாக, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேல்முறையீட்டு மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.