Asianet News TamilAsianet News Tamil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!!

சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த சங்கரய்யா,கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Senior leader of the Communist Party sankaraiah  passed away today due to health problems KAK
Author
First Published Nov 15, 2023, 10:23 AM IST | Last Updated Nov 15, 2023, 10:56 AM IST

சங்கரய்யாவிற்கு உடல்நிலை பாதிப்பு

80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் உள்ள சங்கரய்யா, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவிற்கு வயது 102, வயது மூப்பு காரணமாக கட்சி பணிகளிலிருந்து சில ஆண்டுகளாக விலகி உள்ளார் சங்கரய்யா.  இவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காக இவருக்கு தமிழக அரசு சார்பாக தகைசால் தமிழர் விருது வழங்கியும் கவுரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகியான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பான கோப்புகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ரவி, சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்தார்.

Senior leader of the Communist Party sankaraiah  passed away today due to health problems KAK

சங்கரய்யா காலமானார்

இதற்கு பல்வேறு அரசியில் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.  இதனால் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநருடன் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை புறக்கணித்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

சங்கரய்யாவுக்கு பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பது சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயல் - தினகரன் கண்டனம்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios