sengottaiyan announcement in assembly
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்படமாட்டாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றார். மேலும் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோடடையன், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட மாட்டாது என்றார்.
கடடாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்க தமிழக அரசு கட்டணம் செலுத்துகிறது. மத்திய அரசின் நிதியை எதிர்பார்காமல் தமிழக அரசு கட்டணம் செலுத்துவதால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்க இலவச உபகரணங்கள் வழங்கப்பட மாட்டாது என்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
