All co operatives in the state fair price shops and food products have been available in sufficient quantities Cooperative Minister rival Raju

தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நியாய விலைக் கடைகளிலும், உணவு பொருட்கள் போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வேலூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பண்டக சாலைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தற்போது தமிழகத்தில் மோசமான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையிலும், விலையில்லாத அரிசி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நியாய விலை கடைகளிலும் உணவு பொருட்கள் போதுமான அளவில் இருப்பில் வைக்கபட்டுள்ளதாக அமைச்சர் குறிபிட்டார்.