மணல் குவாரி கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய புள்ளிகள், 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ள என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவற்றை ஆய்வு செய்யும் வருமான வரித் துறையினர் அடுத்தடுத்த ரெய்டுகளை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சேகர் ரெட்டியுடன் பணபரிமாற்றங்கள் வைத்திருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ் வீடு, மகன் விவேக் வீடு, சித்தூரில் உள்ள சம்பந்தி பத்ரிநாராயணன் வீடு உள்பட 13 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் திடீர் ரெய்டு நடத்தினர். விடியவிடிய நடந்த இந்த சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கமும், புதிய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

சித்தூரில் உள்ள ராமமோகன் ராவின் சம்பந்தி வீட்டிலும் பல கோடி பணமும், தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அதேபோல், தலைமைச் செயலகத்தில் ராம மோகன ராவ் அலுவலகத்திலும், அவரது வீட்டிலும் இருந்து முக்கியமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், சி.டி.கள் உள்ளிட்டவற்றை வருமான வரி துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

ராமமோகன் ராவின் நேர்முக உதவியாளர்களான சேகர், குமார் ஆகியோரிடம் அதிகாரிகள் ரகசிய இ

டத்தில் வைத்து விசாரணை நடத்தினர். ராம மோகன்ராவ் விவேக்கையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில், ராம மோகன ராவை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்க தமிழக அரசு உத்தரவிட்டது.