பிரதமர் மோடியின் தமிழக விசிட்...! அதிமுக-பாஜகவுக்கு திமுக தரப்போகும் ட்விஸ்ட்..!
ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் பேசுகிற தேமுதிகவின் நிலைப்பாட்டில் பாஜக அதிப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கிங் மேக்கர், கேம் சேஞ்சர் என்ற பிம்பத்தைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில்அதிமுக- பாஜக, திமுக என இரண்டு கூட்டணிகளிடமும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள், ராஜ்யசபா சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. "அண்ணியாரின் முடிவே வேதவாக்கு" என்று பிரேமலதா பேசுவது பேரத்தின் வலிமையைக் காட்டுகிறது.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருவதால் அதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்யும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவினரும் தீவிரமாக களமிறங்கி இருக்கிறனர். இதனிடையே இரண்டு நாட்களில் உங்க முடிவை சொல்லுங்க. கூட்டணிக்கு வாங்க என அதிமுக தரப்பில் இருந்து பிரேமலதாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இரட்டை இலக்க தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டு என இன்னொரு பக்கம் பிரதமர் மோடி வரும் நாளில் தேமுதிகவை தங்கள் பக்கம் அழைத்து வரும் நிலைப்பாட்டில் திமுகவும் மும்மரம் காட்டி வருகிறது. திமுகவோ தேமுதிக கேட்கும் தொகுதிகளை பற்றி எதுவும் பேசாமல், ராஜ்யசபா சீட்டுக்கு இப்போது உறுதி கொடுக்க முடியாது. ஆனால், நாங்கள் கொடுக்கிற தொகுதிகளில் உங்களை ஜெயிக்க வைக்கிறது எங்கள் பொறுப்பு என திமுக உத்தரவாதம் கொடுத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் பேசுகிற தேமுதிகவின் நிலைப்பாட்டில் பாஜக அதிப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
