மத, இன உணர்வுகள் இன்றி பாரபட்சமில்லாமல் பணியாற்ற வேண்டிய காவல் பணிக்கே அவர் தகுதியற்றவராக உள்ளார். ஆகவே அவரை சஸ்பெண்ட் செய்வதை தாண்டி பணிநீக்கம் செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது. 

சிறுபான்மையினருக்கு மிரட்டல்

வாட்ஸ் அப் குழுவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கிறிஸ்டோபர் என்பவர் மதம் சார்ந்த பாடல் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஆய்வாளராக பணிபுரியும் ராஜேந்திரன் தான் பேசிய ஆடியோ பதிவேற்றினார். அதில் இந்தியாவில் ராம ராஜ்யம் தான், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பாகிஸ்தான், சவூதிக்கு செல்லுங்கள் என பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் ரத்தோர் உத்தரவிட்டார். இந்தநிலையில் இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கையில், வாட்ஸ்அப்பில் மதரீதியாக சிறுபான்மை சமூக மக்களுக்கு மிரட்டல் விடுவிக்கும் வகையில் பேசிய சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Scroll to load tweet…

டிஸ்மிஸ் செய்திடுக- எஸ்டிபிஐ

இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் ஒரு பொறுப்புள்ள காவல் பணியில் இருந்துகொண்டு, சட்டம் ஒழுங்கை பேண வேண்டிய காவல் அதிகாரியான அவர், சமூகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், இந்துத்துவா அமைப்புகளைப் போல் விஷத்தை கக்கியுள்ளார். இதன்மூலம் மத, இன உணர்வுகள் இன்றி பாரபட்சமில்லாமல் பணியாற்ற வேண்டிய காவல் பணிக்கே அவர் தகுதியற்றவராக உள்ளார். ஆகவே அவரை சஸ்பெண்ட் செய்வதை தாண்டி பணிநீக்கம் செய்வதே ஏற்புடையதாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் கோரிவருவதால், தமிழக அரசு அது குறித்து பரிசீலிக்க வேண்டும் என நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

எந்த நேரத்துல என்ன நடக்கமோ? மரண பயத்தில் 490 குடும்பங்கள்! இடிந்து விழும் நிலையில் 17 மாடி குடியிருப்பு வீடு