சென்னையில் பள்ளி வேன் மோதி 2 ஆம் வகுப்பு மாணவம் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பள்ளி வேன் மோதி 2 ஆம் வகுப்பு மாணவம் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல்-ஜெனிபர் தம்பதியின் மகன் தீக்‌சித். இவர் ஆழ்வார் திருநகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 28-ம் தேதி பள்ளி வேன் மோதிய விபத்தி மாணவன் தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், ஓட்டுநர் பூங்காவனம், ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பள்ளித் தாளாளர் ஜெயசுபாஷ், தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 

இதற்கிடையில் போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, காவல்துறை ஆகியோர் இந்த சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பள்ளியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பள்ளி வேனைவிட்டு இறங்கிய தீக்‌சித், பள்ளிக்கு நடந்து சென்றபோது தான் விபத்து நேரிட்டது தெரியவந்ததுள்ளது.மேலுன் மாணவன் செல்வதை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் முன்பக்கமாக இயக்க, தீக்‌சித் மீது வேனின் முன்சக்கரம் ஏறி இறங்கிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

எனவே, வேனை பின்னோக்கி எடுக்கும்போது மாணவன் சிக்கி இறந்ததாக ஏற்கெனவே கூறப்பட்டது உண்மை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.மேலும் அந்த காட்சியில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பூங்காவனம், மாநகராட்சியில் ஓட்டுநராக வேலை பார்த்தவர். அங்கு ஓய்வுபெற்ற பிறகு, இப்பள்ளியில் ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. ஒரு காது சரியாக கேட்கவில்லை. 64 வயதாகும் அவர் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக வேனிலிருந்து அனைத்து மாணவர்களும் இறங்கிய நிலையில், தீக்சித் மட்டும் வேனில் தான் மறந்து வைத்துவிட்டு சென்ற பொருளை எடுப்பதற்காக திரும்பி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, வேனை பார்க்கிங் செய்வதற்காக ஒட்டுநர் பூங்காவனம் ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால் வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித்யை கவனிக்கவில்லை. வேன் திடீரென்று நகர்ந்ததால், மாணவன் தீக்சித் படியில் இருந்து தவறி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கியுள்ளார். இதனையடுத்து, மாணவனின் கதறல் சத்தம் கேட்டு, வேனை நிறுத்தி, படுகாயமடைந்த மாணவனை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் பள்ளி வேன் மோதி 2 ஆம் வகுப்பு மாணவம் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கு 2 நாட்களில் பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.