மார்த்தாண்டம் அருகே பரபரப்பு... பள்ளிக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
தனியார் பள்ளிக்குள் புகுந்து, 2 மாணவிகள் உட்பட, 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார், அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் பள்ளிக்குள் புகுந்து, 2 மாணவிகள் உட்பட, 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார், அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், அருமனை அருகே, சிதறாலில் தனியார் சிபிஎஸ்இ, மேல்நிலைபள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். படம் நடத்தப்பட்டது. மாலையில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது இதே பள்ளி ஆசிரியை ஒருவரின் கணவரும், அரசு பஸ் டிரைவருமான ஜெயன் (48) என்பவர், பள்ள வளாகத்துக்குள் வேகமாக சென்றார். பின்னர், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 வேன்களின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினார்.
இதையடுத்து அதே வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து, வாஷிங்மெஷின், கம்ப்யூட்டர் உள்பட அங்கிருந்த அனைத்து பொருட்களையும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தார். அப்போது, அந்த அப்பகுதியில் நின்று கொண்டிருந்த, திற்பரப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிகள் 2 பேரை தலை மற்றும் கையில் அரிவாளால் வெட்டினார்.
இதை பார்த்ததும், அவரை தடுக்க முயன்ற ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர், ஒரு கூலித் தொழிலாளி ஆகியோரையும் வெட்டினாம். இதை நேரில் பார்த்த மாணவ, மாணவிகள் அலறி கூச்சலிட்டபடி ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பொதுமக்கள் சிலர், ஜெயனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த அரிவாளை பிடுங்கி வீசிய அவர்கள், ஒரு மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்கள் பிடியில் இருநத் ஜெயனை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதற்கிடையில் படுகாயமடைந்த 2 மாணவிகள் உள்பட 4 பேரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.