கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தியாரசனப்பள்ளியைச் சேர்ந்தவர் பாப்பையா. இவரது மகள் சுகன்யா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்புப் படித்து வந்தார்.

 இந்த நிலையில், பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றிருந்தபோது, சிறுமி சுகன்யா விளையாடுவதற்காக வெளியில் சென்றுள்ளார்.

மாலை நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் சிறுமியைத் தேடினர். அப்போது சுகன்யா அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.