ஏர்வாடி,
ஏர்வாடியில் வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த பள்ளிச் சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரை காவலாளர்கள் கைது செய்தனர். ஆசன உறுப்பில் காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி எல்.என்.எஸ்.புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடைய மகன், ஓட்டல் நிர்வாகப் படிப்பு படித்துள்ளார். இவர், சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு உடையவர் எனத் தெரிகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்புதான் விடுமுறையைக் கழிக்க ஊருக்கு வந்திருந்தார். புதன்கிழமை அதே ஊரில் வடக்கு பிரதான சாலையில் அவர் நடந்து சென்றுள்ளார்.
அந்த சாலையில் இருக்கும் வீட்டில், அதே ஊரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 7–ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுவன் தனியாக இருந்துள்ளான். இதை கவனித்த, அந்த வாலிபர் திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அன்த சிறுவனின் ஆடைகளை வற்புறுத்தி களைந்து எரிந்து விட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனால், சிறுவனின் ஆசன வாயில் காயம் ஏற்பட்டதால், அவன் அலறினான். சிறுவனின் சத்தத்தைக் கேட்டு வீட்டிற்குள் அக்கம் பக்கத்தினர் திரண்டுச் சென்றனர்.
இதை தொடர்ந்து சிறுவனை விட்டு விட்டு, அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார். காயத்துடன் அலறிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்குப்பின் அந்த சிறுவன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்.
பின்னர், இதுகுறித்து ஏர்வாடி காவல் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அந்த வாலிபரை காவலாளர்கள் கைது செய்தனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுவனை ஓரினச் சேர்க்கையின் மூலம் வாலிபர் துன்புறுத்திய சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
