சென்னையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி மாணவியை வெளியூருக்கு அழைத்துச் சென்ற வாலிபர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி காயத்ரி. இவரை புரசை வாக்கத்தைச் சேர்ந்த கர்ணம் என்பவர் காதலித்து வந்தார். மேலும் காய்த்ரியை திருமணம்செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி வெளியூர் அழைத்துச் சென்று உல்லாசத் அனுபவித்துள்ளார்.

ஆனால் நாளடைவில் கர்ணன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  மாணவி  காயத்ரியை சந்திப்பதை அவர் தவிர்த்துள்ளார். மேலும் கர்ணனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாக காய்த்ரிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காயத்ரி சார்பில்  புகார் கொடுக்கப்பட்டது. தன்னை ஏமாற்றி கற்பழித்த கர்ணன்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று  அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இதைத் தொடர்ந்து புளியந்தோப்பு மகளிர் போலீஸார் சம்பந்தப்பட்ட கர்ணனிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு  பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டம் 2012 –ன் கீழ் வழக்கு பதிவு செய்து கர்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.