பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன், வரும் 3௦ ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், தற்போது தேர்வுகளை தள்ளி வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளார் .

அதாவது,தமிழத்தில் அதிக வெப்பம் நிலவுவதாலும், வெப்பக்காற்று  அதிகம் வீசுவதாலும் குழந்தைகள்   அதிகளவு பாதிக்கப் படுகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு தேர்வை ஒத்திவைத்து, வரும் 22 ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளிகளில், ஏப்ரல்25 ஆம் தேதிமுதல்29 ஆம் தேதி வரை தேர்வு நடைப்பெற இருந்தது. இந்நிலையில் தேர்வை ஒத்திவைத்து, தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டு  பின்னர் அறிவிக்கப்படும்  என பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும், தனியார் பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் கோடை பயிற்சி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதாவது கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காகவே, தேர்வை தள்ளி வைத்து அமைச்சர்  செங்கோட்டையன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது