Asianet News TamilAsianet News Tamil

தற்காலிக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிப்பு... உத்தரவு பிறப்பித்தது பள்ளிக் கல்வித்துறை!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களின் பணி காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

school education dept has issued an order regarding extension of tenure of temporary teachers
Author
First Published Jan 18, 2023, 5:57 PM IST

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களின் பணி காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சில நேரங்களில் ஆசிரியருக்கான பற்றாக்குறை ஏற்படும் போது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

இதையும் படிங்க: தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்தில் இறந்த சிறுமி - பெற்றோருடன் சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்

அவ்வாறு தமிழகத்தில் 912 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்கள் வாங்கும் அளவிற்கு ஊதியம் மற்றும் சலுகைகள் இல்லை என்றாலும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் போது முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி காலம் முடிவடைய உள்ள நிலையில், பணி காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 50ஆண்டு கனவு ! போடிநாயக்கனூர் முதல் சென்னைக்கு நேரடி ரயில் சேவை: பிப்ரவரி 19ல் தொடக்கம்

இதுக்குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios