காஞ்சிபுரம்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதை கண்டித்து காஞ்சிபுரத்தில் இரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோரை காவலாளர்கள் கைது செய்தனர்.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரயியல் மறியலில் ஈடுபட்டனர். 

இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ரா.தமிழரசன் தலைமைத் தாங்கினார், இவரது தலைமையில் அக்கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக செங்கல்பட்டு இரயில் நிலையம் சென்றனர்.

பின்னர், சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார இரயிலை மறித்து, தண்டவாளத்தில் நின்றும், இரயில் மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனையடுத்து இரையில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவலாளர்கள் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.