சவுக்கு சங்கரின் ஹெச்டிஎப்சி வங்கிக் கணக்கு முடக்கம்.. கிரைம் பிரிவு போலீஸ் அதிரடி.. வெளியான தகவல்!
சவுக்கு சங்கரின் ஹெச்டிஎப்சி வங்கிக் கணக்கை சென்னை நகர சைபர் கிரைம் பிரிவு போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ரெட் பிக்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில் அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிலிப்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?
தற்போது வரை சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிலிப்ஸ் ஜெரால்டு ஆகிய இருவரும் சிறையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, கடந்த சில மாதங்களில் ரூ.1.25 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், சவுக்கு சங்கருக்கு சொந்தமான மேலும் மூன்று வங்கிக் கணக்குகள் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு தரப்போகும் மோடி 3.0 அரசு.. 50% ஓய்வூதியம்.. எப்போ தெரியுமா?