தீவிர சிகிச்சையில் இருக்கும் சசிகலா கணவர் நடராஜனை வைகோ,திருமாவளவன் நலம்  விசாரித்தனர்

இதனை தொடர்ந்து அக்ரஹாரா சிறையில் உள்ள நடராஜனின் மனைவி சசிகலா பரோலில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

உடல்நிலை பாதிக்கப்படடுள்ள கணவர் நடராஜனை பார்க்க சசிகலா சிறை விடுப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் திங்கள் கிழமை பரோல் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க ஏற்கனவே அக்டோபரில் சசிகலா பரோலில் வந்தார்.

உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ம.நடராஜனுக்கு சென்னை மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது   குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வரும் நடராஜன் மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு,செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மெல்ல மெல்ல உடல் நலம் தேறிவந்த நடராஜன் தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளார்

இதனை தொடர்ந்து தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நடராஜனை காண சசிகலா,அதற்கான  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.