பூந்தமல்லி பகுதியில் ஆற்று மணல் பதுக்கிவைத்திருந்த குடோனுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

சென்னை அருகே வண்டலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மணல் லாரிகளை தடுத்த போலீசார் நிறுத்தியபோது ஒரு மணல் லாரி நிற்காமல் வேகமாக சென்றது. 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த மணல் லாரியை விரட்டிச்சென்றபோது பூந்தமல்லியில் உள்ள ஒரு குடோனுக்குள் லாரி புகுந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, காசி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் அரசின் அனுமதியின்றி ஆற்று மணல் மற்றும் எம்சாண்ட் மணலை இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், அந்த குடோனுக்கு தாசில்தார் தலைமையில் பூட்டி சீல் வைத்தனர். பிடிபட்ட லாரியை வண்டலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.