தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இரவு நேரங்களில் தனியார் பள்ளி வாகனம் மூலம் ஆற்று மணல் திருடப்பட்டு வந்தது. நீண்ட நாட்களாக அதிகாரிகள் கண்ணில் மண் தூவி தப்பித்துவந்த கடத்தல்காரர் தப்பியோடினார். ஆனால், அவரின் கூட்டாளி சிக்கினார். இவர்மூலம் அந்த கடத்தல்காரர் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனைத்  தொடர்ந்து கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷமூர்த்தி மற்றும் பட்டீசுவரம் காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் தனியார் பள்ளி வேனை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுகுறித்து தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தனியார் பள்ளி வேனில் ஆற்று மணல் கடத்தப்பட்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.